தேசியவாதத்தை நிராகரிக்குமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மக்ரோன் உலக தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முன்னெடுக்கப்பட்ட முதலாம் உலகப் போரின் முடிவின் நூற்றாண்டு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உள்ளிட்ட கிட்டத்தட்ட 70 உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன் சமாதானத்திற்காக போராடுவோம என்று அழைப்பு விடுத்து்ளள அவர், ஒருவருக்கொருவர் விரோதமாக செயற்பட்டு, அச்சங்களை ஏற்படுத்துவதைக் காட்டிலும் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முதலாம் உலகப்போர் நிறைவின் நூற்றாண்டை அனுசரித்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1914ஆம் ஆண்டிலிருந்து 1918ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போரில் 9.8 மில்லியன் இராணுவ வீரர்களும், 10 மில்லியன் பொதுமக்களும் உயிரிழந்தனர்.