பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் மாதம் 19 ஆம் நாளுக்கு நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளார்.
அத்துடன் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ள நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது ஆசனத்தில் அமராமலே சபை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
பெயரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக, சபாநாயகர் இவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை நாடாளுமன்றத்தின் தற்போதைய அமர்வினை எந்தவொரு காரணத்திற்காகவும் முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதென சனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என்று சனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.