ரொரன்ரோ சென் மைக்கல் கல்லூரியில் இடம்பெற்ற பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை குறித்த அந்த கல்லூரின் வளாகத்தினுள் வைத்து மாணவர் ஒருவர் மீது இந்த தாக்குதல் மேறகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த இந்த சம்பவம் தொடர்பிலான காணொளிப் பதிவு பலர் மத்தியிலும் உலாவிய நிலையில், இரண்டு நாட்களின் பின்னரே அது குறித்த விடயம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது.
குறித்த இந்த கடுமையான பாலியல் குற்றச்செயல் தொடர்பில் தாங்கள் உடனடியாகவே காவல்துறையினருக்கு அறிவித்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே எட்டு மாணவர்கள் வெளியேற்றப்ப்டடதாகவும் கூறப்படுகிறது.
ஆண் மாணவர்களின் குளியலறைப் பகுதியில் முதலாவது சம்பவம் இடம்பெற்ற காணொளிப் பதிவு கடந்த திங்கட்கிழமை தமது கவனத்துக்கு வந்ததாகவும், கல்லூரயின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாக மீறும் செயலாக அது இருந்ததாகவும், பெற்றோர்களுக்கு வெளியிட்டுள்ள அறி்க்கை ஒன்றில் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமையே அது குறித்த உள்ளக விசாரணைகளை ஆரம்பித்ததுடன், காவல்துறைக்கும் தெரியப்படுத்தியதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை திங்கட்கிழமை ஆண் மாணவர் ஒருவர் அங்குள்ள பெட்டக அறை ஒன்றினுள் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் குறித்த காணொளி தமது கவனத்துக்கு வந்ததாகவும், இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வியாழக்கிழமையும் மூன்றாவது சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவும் கிடைக்கப் பெற்றதாகவும், இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் இதுவரை எட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.