சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட விவகாரத்தில் உலக நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்களை சௌதி அரேபியா எதிர்கொண்டுள்ள போதும், அந்த நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரலாறு காணாத அளவு முதலீடு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ள சௌதி அரேபியா தங்களது திடமான கூட்டாளி என்றும் அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கஷோக்ஜி கொல்லப்பட்டது குறித்து சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்றும் அதிபர் டிரம்ப் அதில் ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்த நிலையிலும், சௌதி அரேபியாவுடனான அமெரிக்காவின் உறவு தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சௌதி அரேபியா சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் நாள் துருக்கியில் உள்ள சௌதி தூதரகத்திற்கு சென்ற நிலையில், அங்கு வைத்துக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.