இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட போகின்றன என்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
தற்போது மழை வீழ்ச்சி குறைந்து காணப்படுவதால் இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் குறைந்து வருவதனால் வான் கதவுகள் திறக்கப்படமாட்டாது என்று அவர் விபரித்துள்ளார்.
இரணைமடு குளத்தினை தொடர்ந்து கண்காணிப்புகள் இடம்பெற்று வருவதாகவும் குளத்தில் நீர் 32.11 அடி இருப்பதனாலும், 36 அடி வரைக்கும் சேமிக்க முடியும் என்ற காரணத்தாலும் வான் கதவுகள் திறப்பதற்கு அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வானிலையில் தாழமுக்கம் எதுவும் ஏற்பட்டால் குளத்தின் நீர் உயர்ந்து 36 அடி வந்தால் வான் கதவுகள் திறக்கப்படும் என்று பொறியியலாளர் சுதாகரன் மேலும் தெரிவித்துள்ளார்.