இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் அரசியலமைப்புக்கு எதிரான அரசியல் சதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தம்பர அமில தேரர் அறவழிப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
கொழும்பில் விகாரமாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலைக்கு எதிரே, இன்று காலை தம்பல அமில தேரர் அறவழிப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் புலமையாளர்கள், சிவில் சமூகத்தினர், வணிகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடவுள்ளனர்.
அதேவேளை தனது பெயரில் போலியான முகநூல் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.