மாகாணசபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டுமென இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான கபே தெரிவித்துள்ளது.
கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சத் கீர்த்தி தென்னக்கோன் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட முடியாது எனவும், முதலில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அரசியல் குழப்ப நிலைமைகளை கருத்திற் கொண்டால் பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டுமென தெரிகின்றது எனவும், எவ்வாறெனினும், மாகாணசபைத் தேர்தல்கள் 14 மாதங்களாக காலம் தாழ்த்தப்பட்டுள்ளதுடன், ஒன்பது மாகாணசபைகளில் ஆறு மகாணசபைகளின் பதவிக் காலம் பூர்த்தியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவர் தேர்தலையோ அல்லது நாடாளமன்றத் தேர்தலையோ நடத்துவது
கட்டாயமானதல்ல எனவும், அது நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நடத்தப்பட முடியும் என்றும், அண்மைய அரசாங்கங்கள் தேர்தல்களை ஒத்தி வைத்து வந்துள்ள நிலையில், அரச தலைவர் தேர்தலை அவ்வாறு ஒத்தி வைக்க முடியாது என்றும் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.