க்ரைமியாவுடன் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட கடற்படை மோதலையடுத்து, மோதல் இடம்பெற்ற “அசவ்” கடற்பகுதிக்கு கப்பல்களை அனுப்புவதற்கு நேட்டோ(NATO) அமைப்பின் உதவியை உக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ நாடியுள்ளார்.
உக்ரைனிற்கு உதவுவதற்கும் மற்றும் பாதுகாப்பு வழங்கவும் கடற்படை கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உறுப்பினர் நாடல்லாத உக்ரைனிற்கு முழு அதரவை நேட்டோ வெளிப்படுத்தியுள்ளது.
இதனிடையே எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தனது வாய்ப்புகளை அதிகரிக்க உக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ க்ரைமியா கடல் பகுதியில் ரஷ்யாவுடன் மோதலில் ஈடுபட்டதாக அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்தார்.
ரஷ்யாவில் புதன்கிழமையன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ள அவர், எல்லையில் நிலவும் சூழலை மேலும் பதட்டமாக வைத்திருப்பதற்கு அவர் ஏதாவது செய்தாக வேண்டும் என்று உக்ரைன் அதிபரை குறிப்பிட்டு அதிபர் புட்டின் பேசியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று க்ரைமியா கடல் பகுதியில் ரஷ்யாவின் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் எல்லை படையினர் உக்ரேனின் கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை கைப்பற்றியுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.