ஏமன் போரில் காயமடைந்த சௌதி கிளர்ச்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பின்
விமானம் ஒன்று மீட்கும் என்று அவர்களை எதிர்த்துப் போரிடும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அது கூறியுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சானா நகரில் இருந்து திங்கள்கிழமை காயமடைந்த 50 கிளர்ச்சியாளர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஓமன் கொண்டு செல்லப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌதி ஆதரவு பெற்ற அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்டதிலேயே மிகப்பெரிய மனிதப் பேரிடரை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.