மேகதாது விவகாரத்தை பேசி தீர்ப்பதற்கு விரும்புவதாக கூறி தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்துவருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக அரசு இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளது.
கர்நாடக அரசின் அந்த கடிதத்தில் மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசும் தமிழக மக்களும் நினைப்பது வேறு, ஆனால் உண்மை நிலை வேறு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம் என்றும், சுமுகமாக பேசி தீர்க்கவே கர்நாடக அரசு விரும்புகிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.