இந்தியாவில் ஆளும் தரப்பாக உள்ள பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்று பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
பயங்கரவாதம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்று பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் விடுக்கும் தொடர்ச்சியான கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து இரண்டு தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மும்பை தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள இம்ரான் கான், இந்த வழக்கின் நிலையை ஆய்வு செய்ய அரசை கேட்டுக் கொண்டுள்ளதாகவும், இது பயங்கரவாதம் தொடர்பானது என்றும், இந்த வழக்கை தீர்ப்பதில் தாங்கள் நாட்டம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.