தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்து, சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்றுள்ளார்.
இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது நிலையில், சந்திரசேகர ராவிற்கு ஆளுநர் நரசிம்மன், பதவிப்பிரமாணமும் இரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் கடந்த 7ஆம் நாள் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நேற்றைய நாள் வெளியிடப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது.