பிரித்தானியத் தலைமை அமைச்சரர் திரேசா மே மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.
பிரித்தானியாவில் உள்ளூர் நேரப்படி நேற்று புதன்கிழமை மாலை நடந்த அந்த வாக்கெடுப்பில் 200 பேரின் ஆதரவை பெற்றதன் மூலம் திரேசா மே கிட்டத்தட்ட 63சதவீதமான வாக்குகளை பெற்றுள்ளார்.
தெரீசா மே நேற்றைய நாள் தம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து வெற்றி பெற்று விட்டதால் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு அவர் மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியான பின்னர் பேசிய பிரித்தானியத் தலைமை அமைச்சர் திரேசா மே, வியாழக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டில் தமது பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் திருத்தங்களை கொண்டு வர தாம் போராடவுள்ளதாக கூறியுள்ளார்.