அரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடியபோது குறித்த அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான இடைக்கால அறிக்கை, ஆறு உபக் குழுக்களின் அறிக்கை மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வழிகாட்டல் குழுவின் நிபுணர்களால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.