அமெரிக்க காங்கிரஸின் முதல் இந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர் துல்சி கபார்ட் 2020 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
நான் இது குறித்து தீர்மானித்துள்ளேன் அடுத்த வாரம் இது குறித்து அறிவிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
37 வயதான கபார்ட் ஈராக் யுத்தத்தில் ஈடுபட்டவர் என்பதுடன் அமெரிக்க காங்கிரஸிற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் இந்து – சமோவன் அமெரிக்க சமூக பிரதிநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
யுத்தம் சமாதானம் என்பதே எனது பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாக விளங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
ஜனநாயக கட்சியில் உள்ள தாரளவாதிகள் மத்தியில் துல்சி கபார்ட்டிற்கு ஆதரவுள்ள போதிலும் அவர் கட்சிக்குள் கடும் போட்டியை எதிர்கொள்வார் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனநாயக கட்சியின் செனெட்டர் எலிசபெத் வரன் ஏற்கனவே தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துல்சி கபார்ட் சிரியா ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்தவர் என்பதும் சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தை பதவியிலிருந்து அகற்றுவதை எதிர்ப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்து பெண் வேட்பாளர்