நாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து ஆரம்பகால மரணத்தின் ஆபத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க உதவுகிறது என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
நார்ச்சத்துள்ள உணவுகள் இயல்பாகவே பலவீனமான மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற வாழ்க்கை முழுதும் நீடிக்கக்கூடிய நோய்களின் வாய்ப்புகளை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் நார்ச்சத்துள்ள உணவுகள் எடையை சரியான அளவில் பேணுவதற்கும் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளில் காணப்படும் நார்ச்சத்து மனித உடலுக்கு அதிகளவில் நன்மை தரக்கூடியது என உலக சுகாதார அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி உண்ணும் உணவுகளிலிருந்து 30 கிராம் நார்ச்சத்து கிடைக்கவேண்டுமெனவும் ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் 20 கிராமுக்கும் குறைவாகவே தற்போது உட்கொண்டு வருவதாகவும் இந்த ஆராய்ச்சியில் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓட்ஸ், முழு கோதுமை பாஸ்தா, தானிய வகைகள், பருப்பு வகைகள், தோல் நீக்காத உருளைக்கிழங்கு, உலர்ந்த பழங்கள் மற்றும் தோல் நீக்காத அப்பிள் ஆகியவற்றை நார்ச்சத்து மிகுந்த உணவுகளாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.