2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே பொதுத் தேர்தலுக்கான உத்தேசத்துடன் கனடாவின் அரசியல் பணிகள் ஆரம்பித்துளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாட்டை நிர்வகிக்கும் அரசியல் கட்சியை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஒன்றுக்கு கனேடியர்கள் செல்லவுள்ளனர்.
கொள்கைகள், தேர்தல் உத்திகள் மற்றும் செய்திகள் என்பன லிபரல், கன்சவேட்டில் மற்றும் என்.டி.பி ஆகிய கட்சிகளிடையே பெரிதும் மாறுபட்டுள்ளன
அதனால் தேர்தல் பிரசாரக் களத்தில் அவர்களின் செயற்பாடுகள் காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக மூன்று பிரதான கட்சிகளிடமிருந்து மூத்த அதிகாரிகள் மற்றும் மூலோபாயவாதிகளுடன் நாடாளுமன்றில் கூட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.