முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல நாட்டுக்கூத்து கலைஞரும், மாவீரர் மேஜர் பசீலனின் சகோதரனுமான நல்லையா கணேசலிங்கம் இன்று மாரடைப்பினால் மரணமானார். முல்லைத்தீவில் நூற்றுக்கு மேற்பட்ட மேடைகளில் அரங்கேறிய பண்டாரவன்னியன், கோவலன் கண்ணகி போன்ற வரலாற்று புகழ் கூறும் நாட்டுக்கூத்துக்களில் சிறந்த நடிகராக திகழ்ந்தவர் கணேஸ். கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.