இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் இராஜதந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு தூதுவர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இராஜதந்திர நடவடிக்கைகளை பயன்மிக்கதாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்குமாறு வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் உலக நாடுகளுக்கு இலங்கையை அறிமுகம் செய்யும் புதிய திட்டங்களையும் முன்னெடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், பௌத்தம், தேயிலை மற்றும் வாசனைத் திரவியங்கள், மாணிக்கக்கல் என்பவற்றுக்கு புகழ்பெற்ற இடம் இலங்கை என்பதை உலகிற்கு அறிமுகம் செய்யுமாறும் அவர் தூதுவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
குறித்த செயற்பாடுகளின்போது நவீன தொடர்பாடல் முறைகளையும், சமூக வலைத்தளங்களையும் உள்ளடக்கியதான செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டுமென வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.