வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன் என்று வடக்கின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
யாழ். இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தைப்பொங்கல் தின விசேட நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் 2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.