பிரதமர் தெரேசா மே அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஆளும் கொன்சவேற்றிவ் அரசாங்கம் வெற்றிபெற்றுள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு நடைபெற்று சற்று முன்னர் முடிவு வெளியாகியிருந்தது.
நேற்றையதினம் பிரதமர் தெரேசா மே யின் பிரெக்ஸிற் உடன்படிக்கை பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தொழிற்கட்சித் தலைவரால் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதனடிப்படையில் இன்று நண்பகல் முதல் பாராளுமன்றில் அரசுக்கெதிராக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று இரவு 7மணிக்கு நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பு நடைபெற்றது. அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும் எதிராக 306 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.