அமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கள் பிரவேசிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்கள், குடியேறிகளுக்கு எவ்வித சந்தர்ப்பமும் வழங்கப் போவதில்லை என்று அமெரிக்க அரச அதிபர் டொனால்ட் ட்றம்ப் திட்டவட்டமாக அண்மையில் கூறியிருந்தார்.
குழந்தைகளின் பாதுகாப்பு, நலன்புரி உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் திங்கள் வரையில் 118 இவ்வாhறான தனிமைப்படுத்தும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.