இரணைமடுக்குளம் தென்னிலங்கை அரசியல் வாதிகளின் முக்கியத்துவம் மிக்கதொன்றாக தற்காலத்தில் காணப்படும் நிலையில், அது தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் நிலை காணப்படுவதாக வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் தெற்கில் அரசியல் நெருக்கடியான ஓர் காலகட்டத்திலும் நேரமொதுக்கி அரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சிக்கு சென்று இரணைமடுவின் வான் கதவுகளைத் திறந்துவைத்ததை சுட்டிக்காட்டிய ஐங்கரநேசன், வெள்ள அனர்த்தங்களைப் பார்வையிட சென்ற நீர்ப்பாசன அமைச்சர் ரவூப் ஹக்கீம்; இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தைக் கைவிட இயலாது என்று பேசிச்சென்றதை நினைவூட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தைக குறைகூறிய சிலர் விசாரணையை வலியுறுத்திய நிலையில், ஆளுநரால் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் இரணைமடுக்குளம் மீது அரசின் பார்வை திரும்பியிருக்கிறது என்பதையே காட்டுகிறது என்று குறிப்பிட்ட ஐங்கரநேசன், இதுபற்றிவிழிப்பாக இல்லாதுவிட்டால் குளம் பறிபோகும் நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் மாகாணசபைச் சட்டங்களின்படி இரண்டு மாகாணங்களுக்கிடையே நீர்பங்கிடப்படுமாக இருந்தால் அந்தக்குளங்கள் மத்திய அரசுக்குச் சொந்தமாகிவிடும.; என்றும் அவர்
வடக்கில் உள்ள பாரிய 64 நடுத்தரக்குளங்களில் கட்டுக்கரைகுளம், கல்லாறுக்குளம், வியாட்டிக்குளம், ஈரப்பெரியகுளம், பாவற்குளம் என்று பத்துப்பெருங்குளங்கள் வடமத்திய மாகாணத்தில் இருந்துநீரைபெறுவதால் மத்திய அரசுக்குச்சொந்தமாகி விட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.