உலகின் ஏனைய நாடுகளில் பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியான குழப்ப நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையிலும், கனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையை எட்டும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிதி அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் என்ன நடக்கின்றது என்பதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அந்நாட்டு கொன்சர்வேட்டிவ் அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் கனடாவை நேரடியாக பாதிக்காது என்ற போதிலும் உலக அளவில் சில அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதனை மறுக்க முடியாது என்று அமைச்சர் மோனோ தெரிவித்துள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக் கொள்வதே கனடாவின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.