ரொறண்டோவின் நிலகீழ் தொடரூந்து உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 325 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக நகர முதல்வர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.
கனேடிய போக்குவரத்துச் சேவையான ரீ.ரீ.சீயின் சுரங்கப் பாதை உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் பொறுப்பினை மாகாண அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்கு ஆராய்ந்து வருகின்றது.
எனினும் எதிர்வரும் 2029ம் ஆண்டளவில் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்று நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சிறந்த போக்குவரத்துச் சேவையை வழங்கும் நோக்கில் இவ்வாறான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாகாண நிர்வாகமும், நகர நிர்வாகமும் தெரிவித்துள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் தொடரூந்து நிலையங்களில் நிலவி வரும் சன நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.