ரொறன்றோ உட்பட தெற்கு ஒன்றாரியோவின் பெரும்பகுதியில் பனிப்பொழிவு ஏற்படுமெனவும், கடும் குளிர் நிலவுமெனவும் கனடா சுற்றுச் சூழல் அமைப்புத் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலையில் பனிப்பொழிவு ஆரம்பமாகுமெனவும், ஒன்றாரியோ வாவியின் அருகில் பத்துச் சென்றிமீட்டர் வரையான பனிப்பொழிவு ஏற்படுமெனவும், வடக்கில் அது குறைவாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை பூச்சியத்தின் கீழே 14 பாகை செல்சியஸாக இருக்குமெனவும், காற்று வீசும்போது அது பூச்சியத்தின் கீழே 22 பாகை செல்சியஸாக உணரப்படுமெனவும் கனடா சுற்றுச் சூழல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ரொறன்றோவில் கடந்த புதன்கிழமை பிரகடனம் செய்யப்பட்ட கடும் குளிர் நிலைமை தொடர்பான அறிவிப்பு தொடர்ந்தும் நடைமுறையில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.