கனடாவின் பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக வளர்ச்சி பதிவாகியுள்ளது.
உலகின் பிரதான இரண்டு பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவி வந்த முரண்பாட்டு நிலைiமைகளில் சாதக நிலைமை உருவாகியுள்ளது.
இந்த சாதக நிலைமை கனடாவின் பங்குச் சந்தையில் முன்னேற்றம் பதிவாவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் ரொறன்டோவின் பங்குச் சந்தை 2.4 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், அதற்கு முதல் வாரத்தில் 3.55 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மசகு எண்ணெய்க்கான விலை அதிகரிப்பு பங்குச் சந்தை சுட்டிகளில் சாதக தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ச்சி பதிவாகியுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.