சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினரை துரித கதியில் மீளப் பெற்றுக்கொள்வது ஆபத்தாக அமையக் கூடும் என்று அமெரிக்க செனட்டர் லின்ட்ஸே கிரஹம்( தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாதிகள் முற்று முழுதாக சிரியாவிலிருந்து அழிக்கப்படும் வரையில் அமெரிக்கப் படையினர் முழுமையாக மீளப் பெற்றுக்கொள்ளப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்கூட்டியே அமெரிக்கப் படையினரை சிரியாவிலிருந்து மீளப் பெற்றுக் கொள்வது, மற்றுமொரு ஈராக்கை உருவாக்கக் கூடிய அபாய நிலையை தோற்றுவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அரச அதிபரின் டொனால்ட் ட்றம்ப், தமது படையினரை சிரியாவிலிருந்து மீளப் பெற்றுக் கொள்வதனை காலம் தாழ்த்துவார் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.