முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன், தன்னை விடுதலை செய்யக்கோரி 2 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) ஈடுபட்டுள்ளார்.
குறித்த உண்ணாவிரத போராட்டத்தை நேற்று பிற்பகல் முதல் முருகன் தொடங்கினார்.
முருகனின் போராட்டம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, “தன்னை விடுதலை செய்யக்கோரியே, முருகன் இந்த உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஆளுநர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்மெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான மனுவையும் சிறை நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்” என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை முருகன், வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தனது மனைவி நளினியை, முருகன் நேற்று சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.