ஆந்திர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு மிரட்டுவதாக மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு, நேற்றைய கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவுக்கு எதனையும் செய்யவில்லை. ஆகையால் அவரது ஆட்சியில் ஆந்திராவின் அபிவிருத்தி பின்னடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆந்திராவின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து ஆராய வாரம் ஒரு மத்திய அமைச்சர் வருகை தருவாரென மத்திய அரசு அறிவித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், எந்ததொரு அபிவிருத்தி நடவடிக்கைகளும் மக்களுக்காக முன்னெடுக்கப்படவில்லை என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இந்நிலையில் ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்துவோமென மத்திய அரசாங்கம் அச்சுறுத்துவதாகவும், இந்த மிரட்டல்களுக்கு நாம் அஞ்சப் போவதில்லை என்றும் ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார்.