இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான செல்வ வேறுபாடு மிக அதிக அளவால் தொடர்ந்து அதிகரித்துச் செல்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக oxfam கவலை வெளியிட்டுள்ளது.
டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டம் ஆரம்பமாவதை முன்னிட்டு அது வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்தியா குறித்த விபரங்களும் அடங்கியுள்ளன.
செல்வத்தின் அடிப்படையில் முதல் ஒரு சதவீதத்தில் உள்ள இந்தியர்களின் செல்வம் கடந்த ஆண்டில் 39 சதவீதத்தால் அதிகரித்ததெனவும், செல்வத்தின் அடிப்படையில் கீழ் மட்டத்தில் உள்ள நாட்டின் அரைப்பங்கினரின் செல்வம் மூன்று சதவீதத்தால் மட்டும் அதிகரித்தெனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் ஒரு சதவீத செல்வந்தர்களிடம் நாட்டின் செல்வத்தின் 51.53 சதவீதம் இருக்கும் அதேவேளை, கீழ்மட்ட 60 சதவீத மக்களிடம் நாட்டின் செல்வத்தின் 4.8 சதவீதம் மட்டும் இருப்பதாகவும் ஒக்ஸ்ஃபாம் குறிப்பிட்டுள்ளது.