இலங்கையில் இராணுவ முகாம் அமைக்கும் எவ்வித திட்டங்களும் கிடையாது என்றும் அவ்வாறு வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவம், கரையோரப் பாதுகாப்பு பயிற்சி, இராணுவ பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையில் அமெரிக்க இராணுவ முகாம் அமைப்பது குறித்து அரசாங்கத்துடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் தூதுவராலயச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா இலங்கையில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.