லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரோக்கியமான செய்திகளை கனேடியர்களுக்கு எடுத்துச் செல்ல முன்வர வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
ஓடாவாவில் நாடாளுமன்றக் கட்டத்தில் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரண்டு நாள் கூட்டம் நேற்று ஆரம்பமாகியபோது ரூடோ ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
கனேடிய மக்களின் நம்பிக்கை ஒளிக்கீற்றாக தமது லிபரல் கட்சி திகழ்கின்றது எனவும், கொன்சர்வேட்டிவ் கட்சி மக்களை விட்டு தூரம் சென்ற ஓர் கட்சியாக அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் ஒருவரைத் தாக்கி பிரச்சாரம் செய்யக் கூடாது எனவும் சாதகமான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சி மக்களுக்கு நலன்களை வழங்கக்கூடிய எந்தவொரு திட்டத்தையும் முன் வைக்கவில்லை என்றும் பிரதமர் ரூடோ தெரிவித்துள்ளார்.





