கொன்சவேடிவ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளரான மெக்ஷிம் பேர்ணியரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான மக்கள் கட்சி பதிவு செய்யப்பட்டு சில தினங்களில் பெருந்தொகை நிதியை திரட்டிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்சி ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கபட்டு சில நாட்களில் மூன்று இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஆயசவin ஆயளளந தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் கொன்சர்வேட்டிவ் கட்சியை விட்டு விலகி தனியாக கட்சி ஆரம்பிக்க உள்ளதாக பேர்ணியர் அறிவித்தனைத் தொடர்ந்து இதுவரையில் ஒரு மில்லியன் டொலரை அவர் திரட்டியுள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக மூன்றரை பில்லியன் திரட்டவுள்ளதாகவும் அக்கட்சியின் பேச்சாளர் கூறினார்.