ஒன்றாரியோ மாகாண வீதிகளில் சாரதியற்ற தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ மாகாண அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சாரதிகள் அற்ற வாகனங்களை ஒன்றாரியோ மாகாண வீதிகளில் செலுத்திப் பரிசோதிப்பதற்கு முன்னோடித் திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களுக்கு ஜனவரி முதலாந் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜெஃப் யுறெக் (லுரசநம) தெரிவித்துள்ளார்.
ஊபர், பிளக்பெரி, வோட்டர்லூ பல்கலைக்கழகம் உட்பட ஒன்பது நிறுவனங்கள் பத்து வகையான கார்களைப் பரிசோதித்து வருகின்றன.
எனினும் முழுமையான தன்னியக்க முறையில் அவை செலுத்தப்படவில்லை.
இந்நிலையில் பொதுமக்களும், தன்னியக்க முறையில் இயங்கும் வாகனங்களை ஒன்றாரியோ வீதிகளில் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தகைய வாகனங்களின் கட்டுப்பாட்டை எந்த நேரத்திலும் பொறுப்பேற்கக் கூடிய நிலையில் வாகன சாரதிகள் இருக்வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.