கனடாவில் இவ்வாண்டில் மக்களுக்கு வழங்கப்படும் தொற்றுநோய் தடுப்பு ஊசி, பயனளிப்பதாக சுகாதார் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயதுப் பிரிவினர் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்ட கணிப்புக்கு அமைவாக, காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதில் இந்தத் தடுப்பூசி 72 சதவீதம் பயனுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இவ்வாண்டில் ர்1N1 இன் உப பிரிவான வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
கடந்த 2017-2018 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வழங்கப்பட்ட தடுப்பு மருந்து, அந்தக் காலப்பகுதியில் பரவிய ர்3N2 வைரஸின் உப வகையைத் தடுக்கும் வகையில் அமைந்திருக்காதமையால், சுமார் 20 சதவீதமான பயனை மட்டும் அளித்திருந்தது.