சீனாவுக்கான கனடியத் தூதராக பதவி வகித்து வந்த முன்னாள் குடிவரவுத் துறை அமைச்சர் ஜோன் மெக்கலம் பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வன்கூவரில் கைது செய்யப்பட்ட ஹ_வாவே நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரி மெங் வான்ஸ{வை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பில், ரொறண்டோவில் சீன ஊடகத்துறையினருக்கு அவர் அண்மையில் வெளியிட்ட கருத்து பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
வான்ஸ{ தம்மை அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதனை எதிர்ப்பதற்கு நியாயமான ஏதுக்கள் உண்டு என்று அவர் தெரிவித்த கருத்தை, பின்னர் மீளப்பெறுவதாக மெக்கலம் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் மெக்கலத்தை பதவி விலகுமாறு பிரதமர் ஜஸ்ரீன் ரூடோ கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில் துணைத் தூவதுவர் துiஅ Niஉமநடஇ சீனாவுக்கான தூதுவராக கடமையாற்றுவார் என்று பிரதமர் ரூடோ அறிவித்துள்ளார்.