407 அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்காக அறவீடு செய்யப்பட்டு வந்த போக்கவரத்துக் கட்டணம் எதிர்வரும் பெப்ரவரி 1ம் நாள் தொடக்கம் அதிகரிக்கப்பட உள்ளது.
தற்போதைய கட்டணத்தை விடவம் 14 மடங்கு கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன நெரிசல் காணப்படும் நேரங்களில் கட்டண அதிகரிப்பு உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கட்டண அதிகரிப்பினால் இந்த அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவது குறித்து இரண்டு தடவைகள் சிந்திக்க நேரிட்டுள்ளதாக வாகன சாரதிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.