எரிபொருளுக்கான விலை உயர்வினைத் தொடர்ந்து, அல்பர்ட்டாவில் எரிபொருள் உற்பத்தி; தொடர்பிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விலை உயர்விற்கு ஏற்ற வகையில் எரிபொருள் உற்பத்தியின் அளவில் ஏற்ற இரக்கங்களை செய்து வருவதாக அல்பர்ட்டா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான எரிபொருள் உற்பத்தி அளவு நாள் ஒன்றுக்கு 3.63 மில்லியன் பீப்பாய்கள் என அதிகரிக்கப்படும் என முதல்வர் சுயஉhநட ழேவடநல தெரிவித்துள்ளார்.
இந்த தொகையானது இந்த மாதம் அரசாங்கம் அறிவித்திருந்த எரிபொருள் உற்பத்தி கட்டுப்பாடுகளை விடவும் 75000 பீப்பாய்கள் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.