எதிர்வரும் கல்வியாண்டில் முழுநேர கின்டர்கார்டின் முன்பள்ளி வகுப்புக்கள் இரத்துச் செய்யப்படமாட்டாவென ஒன்றாரியோ மாகாண கல்வியமைச்சர் லீசா தொம்சன் தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி வகுப்புக்கள் எதிர்வரும் கல்வியாண்டிலும் தொடருமெனவும், அதன் பின்னர் ஏதாவது மாற்றங்கள் வருமா என்ற விடயம் தற்போது மேற்கொள்ளும் கலந்தாலோசனைகளின் பின்னரே தெரியவருமெனவும் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
ஒன்றாரியோ மாகாண அரசின் பாதீட்டில் காணப்படும் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை நீக்குவதற்குச் செலவினங்களைக் குறைப்பதற்கு மாகாண அரசு முற்பட்டுள்ளது.
முழு நேர முன்பள்ளி வகுப்புத் திட்டத்தால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ஒன்றரை பில்லியன் டொலர் செலவு ஏற்படுவதாக தெரியவருகின்றது.