கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கைப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள கரைச்சி பொது நூலகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படும்போது ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
ஏ-9 வீதியில் உள்ள பொது நூலகத்தின் முன்பாக எதிர்வரும் நான்காந் நாள் காலையில் கவனஈர்ப்புப் போராட்டம் நடத்துவதென கரைச்சி பிரதேச சபையின் கொள்கை நடைமுறைப்படுத்தல் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள், பல்கலைக்கழக மாணவர்களினதும், குடிசார் அமைப்புக்களினதும் பங்களிப்புடன் காணிகளை விடுவிக்குமாறு கோரி இப்போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.