சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் கைதிகளில் எந்த தமிழ் அரசியல் கைதிகளும் இல்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 4 பெண்கள் உட்பட 545 சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாளை (திங்கட்கிழமை) விடுவிக்கப்படவுள்ளனர்.
அந்தவகையில் விடுவிக்கப்படவுள்ள கைதிகளின் பட்டியலில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக ஆதவன் செய்தி சேவை அவரிடம் வினவிய போது, “விடுதலையாகும் கைதிகளில் தமிழ் கைதிகளும் உள்ளடங்குவதாக எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை” என்றும் கூறியுள்ளார்.