தி.மு.க.ஸ்தாபகரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 50 ஆவது நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஸ்டிக்கப்படுகின்றது.
அதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அண்ணாவின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
குறித்த நிகழ்வில் அ.தி.மு.கவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துக்கொண்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதில் தி.மு.க பொருளாளர் துரை முருகன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.