யெலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் தொடர்சியாக 12 ஆவது வாராமாகவும் நேற்று(சனிக்கிழமை) பிரான்ஸ் தலைநகர் பாரிசில் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் விலையேற்ற கொள்கைகளை கண்டித்து பாரிசில் நேற்றும் ‘யெலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதன்போது பிரான்ஸ் அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஆர்பாட்டகாரர்கள், ஜனாதிபதி மக்ரோனை பதவி விலகுமாறும் வலியுறுத்தினர்.
பாரிசில் நடைபெற்ற நேற்றைய ஆர்பாட்டத்தில் ஆயிரம் பொலிஸார் வரை காயமடைந்துள்ளதுடன், ஆயிரத்து 700 க்கும் அதிகமான ஆர்பாட்டகாரர்களும் காயமடைந்துள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்தில் 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரையான ஆர்பாட்டகாரர்கள் கலந்துக்கொண்டு, அரசாங்கத்தை எதிர்த்து போராடியுள்ளனர்.
இவ்வாறு ஒன்று திரண்ட ஆர்பாட்டகாரர்களை கட்டுப்படுத்த, கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் என்பவற்றை ரியோட் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் கடந்த வெள்ளிக்கிழமை பாரிஸ் நிர்வாக நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தடியடி பிரயோகத்தை நடத்தவில்லை.