பிரிக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி பிரித்தானியா விலகிக் கொள்ளும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அசராங்க அதிகாரிகளுக்கு இடையில் மூன்று நாள் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
பிரிக்ஸிட் விவகாரத்தில் அயர்லாந்தின் பெக்ஸ்டொப் ( டியஉமளவழி) திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக பிரிக்ஸிட் செயலாளர் ஸ்டீபன் பார்க்லேய் (ளுவநிhநn டீயசஉடயல) தெரிவித்துள்ளார்.
பெக்ஸ்டொப் திட்டத்திற்கான மாற்று யோசனைகளை முன்மொழிவது அது தொடர்பில் கலந்தாய்வு செய்வது போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தியே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் மார்ச் 29ம் திகதி பிரித்தானியா அதிகாரபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸிட் தொடர்பில் பிரதமர் தெரேசே மே முன்மொழிந்த யோசனைகள் நாடாளுமன்றில் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிச் செல்லும் போதான இணக்கபாடுகளின் ஓர் காப்பீட்டுத் திட்டமாக பெக்ஸ்டொப் காணப்படுகின்றது.