அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது பதிலடியாக கனடா விதித்துள்ள வரிகளை இரத்துச் செய்யுமாறு ஒன்றாரியோ மாகாண அரசு விடுத்த கோரிக்கையை கனேடிய மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
இரண்டு நாடுகளும் விதித்துள்ள வரிகள் இரண்டு நாடுகளின் தொழிற்துறையையும் தொழிலாளர்களையும் பாதிப்பதாகவும், கனடா வரிகளைக் கைவிட்டால், அமெரிக்காவும் வரிகளைக் கைவிடக் கூடுமெனவும் ஒன்றாரியோ மாகாண பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் ரொட் ஸ்மித்(வுழனன ளுஅiவா) கூறியிருந்தார்.
அத்தகைய நடவடிக்கை ஒரு தலைப்பட்சமாக அமெரிக்காவிடம் சரணடைவதற்கு நிகரானதென மத்திய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் நவ்தீப் பெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அமெரிக்கா மீது அழுத்தம் பிரயோகிப்பதற்குப் பதிலடியாக கனடா விதித்த வரிகள் முக