இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய வங்கிகளில் இருந்து .9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபரான மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.
உள்துறை அமைச்சர் சஜிட் வாயிட் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தும் உத்தரவில் கையெழுத்தி;ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு இங்கிலாந்து அனுமதி வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம் அவர் எதிர்வரும் 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யும் அதேவேளை, நீதிமன்றத்தால் அது நிராகரிக்கப்படும் நிலையில், உள்துறை அமைச்சரால் நாடுகடத்தும் உத்தரவில் கையொப்பமிடப்பட்ட நாளில் இருந்து 28 நாட்களுக்குள் மல்லையா நாடுகடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.