கனடாவில் அடகுக் கடன் பெற்றுக் கொள்வோரின் தகுதி தொடர்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவது தளர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனமொன்றில் அடகுக் கடன் பெற்றுக் கொள்ள எத்தனிக்கும் நபர் ஒருவரின் மீள் செலுத்துகை உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் ஆராயப்பட்டு அதன் அடிப்படையிலேயே கடன் வழங்கப்படுகின்றது.
எனினும், அடகுக் கடன் வழங்குவது தொடர்பில் தற்பொழுது கனடாவில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நியதிகள் என்பன மிகவும் கடுமையானவை என்று பொருளாதார வல்லுனர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் காலங்களில் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென வங்கிகள், அடகுக் கடன் சேவை நிறுவனங்கள் என்பன கனேடிய நிதிக் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளன.
அடகுக் கடன் சேவையில் காணப்படும் கடுமையான நியதிகள் தனிப்பட்ட கடன் கொடுனர்களிடம் கடன் பெற்றுக் கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.