ரொறன்றோவில் இரண்டு தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கான தண்டனையைத் தீர்மானிக்கும் விசேட நீதிமன்ற அமர்வின் முதல் நாள் இன்று நடைபெற்றது
மிகவும் கொடூரமான முறையில் மக்காத்தர் இந்த படுகொலைகளைச் செய்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பாலியல் முறைகேடாக துன்புறுத்தப்பட்டு கொடூரமான முறையில் நபர்களை மக்காத்தர் படுகொலை செய்துள்ளதாகவும் பின்னர் அவர்களை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாம் எட்டு பேரை படுகொலை செய்தமையை அவர் கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றில் ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையி;ல் அவருக்கு எதிரான பல்வேறு ஆதாரங்கள் சாட்சியங்கள் என்பன இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டன.
ஸ்கந்தராஜ் நவரட்னம், கிருஸ்ணா கனகரட்னம், ஆகியோர் கொலைசெய்யப்பட்ட எட்டுபேருள் உள்ளடங்கும் இரண்டு தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விசேடநீதிமன்ற அமர்வின் இரண்டாம் நாள் விசாரணை நாளை காலை 10 மணிக்கும் மீண்டும் ஆரம்பமாகும் என்று நீதிபதி இன்றைய நாள் அமர்வின் நிறைவில் அறிவித்தார்.