அமெரிக்காவிற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வண்ணம் இரண்டு புதிய ஏவுகணைக் கட்டமைப்புக்களை எதிர்வரும் 2021ம் ஆண்டளவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
தரைவழியாக தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகளே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரஸ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த அணுவாயுத கட்டுப்பாட்டுச் சட்ட உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதனை தொடர்ந்து இவ்வாறு ஆயுதங்களை ரஸ்யா அறிமுகம் செய்ய உள்ளது.
பனிப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அணுவாயுதங்களை களைவதற்கு இணங்கும் உடன்படிக்கையை இடைநிறுத்திக் கொள்வதாக ரஸ்ய அரச தலைவர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
அணுவாயுத களைவு தொடர்பில் அமெரிக்காவும், ரஸ்யாவும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டே இந்த உடன்படிக்கையிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா புதிய ஏவுகணை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதேவிதமான ஓர் முயற்சியில் ரஸ்யாவும் இறங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.